இன்றைய ராசி பலன் – 26-07-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பங்களிப்பு திருப்திகரமாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்களை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையலாம். குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வது நல்லது. பொருளாதாரம் சீராக இருக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து மோதல்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வீண் பழிகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாளாக கண்ட கனவு ஒன்று பலிக்க இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக்கும் என்பதால் கூடுமானவரை மௌனம் காப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கருணை பொழியும் உங்களுடைய குணத்தால் அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். தடைப்பட்ட சுப காரிய பேச்சுவார்த்தை கைகூடிவரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். சமூகத்தின் மீதான மதிப்பும், மரியாதையும் உங்களுக்கு உயரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமைய இருக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து எதிர்பார்க்கும் பணத் தொகை கைக்கு வந்து சேரும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க திணறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இட மாற்றம் குறித்த விஷயங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லை குறையும். புதிய முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். விநாயகரை வழிபடுவது சிறப்பு பலன்களை கொடுக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் மறந்து உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய முழு முயற்சிக்கு உரிய பலன்களை காண இருக்கிறீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கான விடை கிடைக்கக் கூடிய அற்புதமான நாளாக இருக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அற்புதமான பலன்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க இருக்கிறது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் காண பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்களின் போது கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் பலம் அறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் பழிகள் ஏற்பட நேரலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். திங்கட்கிழமை தோறும் சிவ வழிபாடு மேற்கொள்ள நன்மைகள் நடக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வதை தவிர்ப்பது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான பண விஷயத்தில் கூடுமானவரை கூட்டாளிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமையும். ஆரோக்யம் சீராக இருக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்த நிலை மாறி புது புத்துணர்ச்சி பெற இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன உளைச்சலில் இருந்து விடுதலை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நடந்த பனிப்போர் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தீரும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையேயான மன கசப்புகள் தீரும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கவலைகள் நீங்கி உற்சாகம் கொள்ள கூடுமான வரை முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பொறுமை தேவை. சுய தொழிலில் லாபம் உண்டு.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். புதிய தொழிலாளர்களை பணி அமர்த்த முயற்சி செய்வீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனமுடனிருப்பது உத்தமம்.