இன்றைய ராசி பலன் – 24-07-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்வேகத்துடன் செயல்பட கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களை நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வெளியிடங்களில் நன் மதிப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை சாதித்துக் காட்ட கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய விமர்சனங்களை பொறுத்துக் கொள்வது நல்லது.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னுடைய பலவீனம் அறிந்து செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நட்புகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைத்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் திருப்தி அடைவார்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய நட்புகள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்லும் வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறமையாக சமாளித்து வெற்றி காணலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புது உத்வேகத்துடன் செயல்பட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. விட்டு சென்ற உறவுகளின் மீண்டும் வந்து சேரும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி அடையக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய வெளிவட்டார பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பகைவர்கள் தொல்லை ஒழியும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் எல்லாம் கிடைக்கப் பெறுகிறது. சுபகாரியங்கள் கைகூடி வரும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான முடிவுகளை சாதகமான பலன்கள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் நிறைய உண்டு. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். இதனால் உடல் சோர்வடைய வாய்ப்புகள் உண்டு.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக முடிக்க வேண்டிய சில விஷயங்களை கூட சிரமப்பட்டு முடிப்பீர்கள். தேவையற்ற முன் கோபத்தை தவிர்த்து அமைதி காப்பது நல்லது. கணவன் மனைவி உறவு சிக்கல் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பிடிவாத குணத்தை கட்டுப்படுத்துவது நல்லது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கைகள் மூலம் அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். இதுவரை நிலவி வந்த பகைகள் ஒழியும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகமான பலன்களைக் காண்பீர்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கற்பனை வளத்திற்கு சிறந்த பலனைக் காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான வீண் விரயங்களை சந்திப்பதில் கவனத்துடன் இருப்பது உத்தமம். தீட்டிய திட்டங்கள் தீட்டியபடியே நிறைவேற கூடிய அற்புதமான வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.