இன்றைய ராசி பலன் – 21-07-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றியுள்ளவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் மூன்றாம் நபர்களை நம்புவதை தவிர்க்கவும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உரிய பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய கடினமான முயற்சிக்கும் உரிய அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறையும் வாய்ப்புகள் உண்டு. வெளியிட போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடனிருப்பவர்களை நம்பி நீங்கள் செய்யும் சில விஷயங்கள் தோல்வியை தழுவ நேரலாம். கூடுமானவரை பெரியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய கடின முயற்சி களுக்கு உரிய பலன்கள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கனிவான பேச்சாற்றல் மூலம் பல விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமைய இருக்கிறது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் உடைய தொந்தரவு விரக்தியை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் எதிர்பார்த்த படி நடக்க இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க கூடிய இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விட்டுக்கொடுத்து செல்வது நலம் தரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதி சீர்குலைய வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பார்க்கும் தொகை கைக்கு வந்து சேரும். தள்ளி சென்ற நல்ல காரிய முயற்சிகளுக்கு பலன் காண கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நினைதது நடக்க காட்டக்கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது உத்தமம். உங்களுடைய முன்கோபத்தால் தேவையில்லாத இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நலம் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவு நிறைவேற கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையோ இழந்தது போன்ற ஒரு உணர்வு மனதிற்குள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் உங்களுடைய பொறுப்புணர்ந்து செயல்பட ஆரம்பிப்பீர்கள். குடும்பத்தில் உங்களை அதிக மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். கணவன் மனைவி உறவுக்கு இடையே உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்து கொள்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்க்கும் துணிவு ஏற்படும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடிவாளம் கட்டியது போல தங்கள் இலக்கை நோக்கிய முன்னேற்றத்தில் இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அரசு வழி அனுகூலமான காரியங்கள் நிறைவேறும். வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீரென எடுக்கும் முடிவுகளை கவலை கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத பழக்க வழக்கங்களை தவிர்த்துக் கொள்வது உத்தமம். பெரிய மகான்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பொறுப்புகள் சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியான ஏற்றம் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய வைக்கும்.