இன்றைய ராசி பலன் – 20-07-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத வகையில் திடீர் பண வரவு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவால் அனுகூலமான பலன்களை காண இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் சலுகைகள் மற்றும் பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். ஆரோக்கியம் கவனம் தேவை.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவு நிறைவேற கூடிய அற்புதமான வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யும் பொழுது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மூன்றாம் நபரை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் காலதாமதமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்:

கடகராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதையும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு பண உதவி கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பங்களிப்பு கூடுதலாக அமையும். பங்குதாரர்களின் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத வகையில் நன்மைகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய சாதுரியமான நடவடிக்கைகள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. வருமானம் பெருகும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களின் போது கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய சிந்தனைகள் மூலம் உங்கள் திறமைக்கு வலு சேர்க்க கூடிய வாய்ப்புகள் அமையும். வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது உத்தமம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பதை விட கூடுதல் நல்ல பலன்கள் கிடைக்க இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு எரிச்சலூட்டும் வகையில் அமையும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்துகளில் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்பின் தெரியாதவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தின் மீதான உங்களுடைய அக்கரை மேலோங்கிக் காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்து வந்த பழைய பாக்கிகள் வசூலாகி கூடிய வாய்ப்புகள் அமையும். விட்டு சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான எதிர்பார்ப்புகளை பூர்த்தி அடையும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலோங்க வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை மௌனம் காப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்:

மீன ராசிக்காரர்கள் இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற கடன்களை தவிர்ப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.