இன்றைய ராசி பலன் – 19-07-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனரீதியான வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தீராத மன உளைச்சலில் இருந்து விடுதலை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பம் நீங்கும். தெளிவான முடிவு எடுக்கக்கூடிய சிந்தனை பிறக்கும். பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் திறம்பட சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் பலன் தரும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே புதிய புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது உத்தமம். முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு எரிச்சலை உண்டாக்கும் வகையில் அமையும். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கருத்தொற்றுமை நிகழும். குடும்ப நபர்களை அனுசரித்து செல்வது நலம் தரும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு பெருகும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி புது உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நீண்ட நெடிய பயணங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் அமையும். பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்து செல்வது நலம் தரும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுய புத்தியுடன் செயல்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? என்பதை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது வரை இருந்து வந்த பகை நிலை மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் ஒரு விதமான இனம் புரியாத குழப்பம் நீடிககும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அனுகூலமான பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான பலன்களை பெறலாம். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். ஆரோக்கியம் சீராகும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஒற்றுமை குறைய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரவு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது உத்தமம். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலன் தரும் வகையில் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அமையும். உங்கள் திறமைக்கு உரிய பாராட்டு பெறுவீர்கள். ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்களை தவிர்க்க கவனம் தேவை.