இன்றைய ராசி பலன் – 17-07-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பண உதவி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை வாங்கும் யோகம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர ஒற்றுமை இருக்கும். தேவையில்லாமல் யாரிடமும் வாயை கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சிந்தித்து செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோயோக ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்பற்றாக்குறையை எப்படி சமாளிக்க வேண்டும் என்கிற பதட்டத்துடன் காணப்படுவீர்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிரடி மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் காணக்கூடிய புதிய வழிகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமையும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு சில தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் பாக்கியம் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் பிரச்சினைகள் தீரும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனசோர்வு காணப்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது உற்சாகம் தரக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் ஒத்துழைப்பு கொடுத்து விடாமுயற்சியுடன் வெற்றி பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் தடைப்பட்ட சில விஷயங்கள் முடிவுக்கு வரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் தீர கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சவாலான விஷயங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான வீண் விரையங்கள் ஏற்படாமலிருக்க கவனமுடனிருப்பது நல்லது.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தின் மீதான உங்களுடைய அக்கறை அதிகரித்து காணப்படும். சுயதொழிலில் முன்னேற்றத்திற்கான பாதைகளை தேர்ந்தெடுப்பீர்கள். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்லும் வாய்ப்புகள் அமையும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சுயத் தொழிலில் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து காணப்படும். சக போட்டியாளர்கள் மத்தியில் உங்களுடைய திறமையை வெளி உலகிற்கு வரும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனம் தேவை. சுய தொழிலில் ஈடுபடுபவர்கள் தேவையற்ற அறிமுகங்களை தவிர்த்துக் கொள்வது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை விரக்தியை உண்டாக்கும் வகையில் அமையும். கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் வலுவாகும் என்பதால் கூடுமானவரை விட்டுக்கொடுத்து மவுனம் காப்பது நல்லது.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நடக்கும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய திறமைகள் வெளி உலகிற்கு கொண்டு வருவீர்கள். விடாமுயற்சியுடன் வெற்றி பெறக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கும்.