இன்றைய ராசி பலன் – 15-10-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல லாபம் கிடைக்கக்கூடிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் யாவும் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிக்கு கட்டுப்பட்டு நடப்பது மிகவும் நல்லது. பெண்கள் வேலை செய்யும் பொழுது வேலையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். பூர்வீக சொத்துக்கள் அனுகூலம் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான வெற்றி தரக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. எடுக்கும் முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. திடீர் பயணங்கள் மூலம் புதிய அறிமுகங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். தொழில் ரீதியான போட்டி பொறாமைகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் தாராளமாக முடிவு எடுக்கலாம். குடும்பத்தில் இருக்கும் நபர்களை அனுசரணையாக நடத்துவதன் மூலம் மகிழ்ச்சி பெறலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழிலாளர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் வில்லங்கம் வரக்கூடும் என்பதால் கவனம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தைரியம் அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக லாபம் கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கையும் தைரியமும் அடுத்த படிக்கு கொண்டு செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. சமூகத்தின் மீதான பார்வை நீங்கள் மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உண்டு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் பெருகும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் எளிதாக பூர்த்தியாகிவிடும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறைவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்காக நிறைய முயற்சி செய்வீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்களின் பொழுது கவனத்தை செலுத்த வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. வாகன ரீதியான பயணங்களை கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பாராத பிரச்சனைகள் வரக்கூடும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதல் உண்டாகும். இதுவரை இருந்துவந்த குடும்ப பிரச்சனைகள் தீர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு இலாபம் பெற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டு. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. நிலையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படும். வேலை பளு அதிகரித்தாலும் உங்களுடைய வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில்லை பிரச்சனைகள் உண்டாகும். புதிய யுத்திகளை கையாள்வது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் நல்லவைகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள். கூட்டு தொழில் புரிபவர்களுக்கு லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. வீண் விரயங்களை சந்திக்க கூடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பொருளாதாரம் சீராக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் உண்டு.