இன்றைய ராசி பலன் – 8-10-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முடிவுகளை எடுப்பதில் தயக்கம் காட்ட மாட்டீர்கள். புதிய முயற்சிகள் பலன் தரும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று குழப்பங்கள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் செய்வது சரியா தவறா என்பதை முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சகோதர, சகோதரிகள் வழியே அனுகூலமான பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரலாம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத பணவரவு குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். நிலுவையில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். சுப விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் அற்புதமான நாளாக இருக்கும். நீங்கள் எதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறீர்களோ அவைகளை நோக்கிய பயணத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட லாம். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கப்பெறும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டு.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதைத் தாங்கக் கூடிய மனோ திடம் உண்டாகும். உங்களை தவறாகப் புரிந்து கொண்டவர்கள் தங்கள் தவறை உணர்வதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி அன்பு அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டில் இருக்கும் நபர்களின் பேச்சுக்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் நல்ல பலன் தரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற கவலைகள் மனதை நிலைக்கச் செய்யாது. தெளிவான சிந்தனையும் அதீத பொறுமையையும் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். யாரிடமும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது மன அமைதியை தரும். கணவன் மனைவி இடையேயான சிக்கல்கள் தீர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. கடன் சுமை குறைவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கின்றது. எடுக்கும் முயற்சிகளில் அமோக வெற்றி தரும். பெண்களுக்கு நினைத்ததை நினைத்தபடியே நடக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்க நேரலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படாமலிருக்க அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் வேலையில் கவனம் தேவை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்களிடையே மதிப்பும் மரியாதையும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. மரம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் கால தாமதம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக முடித்து காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்க்காத பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கை வேண்டும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனநிம்மதி கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. இது நாள் வரை குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் நல்ல தெளிவு அடைவீர்கள். சிறந்த முடிவுகள் எடுப்பதற்கு நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். புதிய தொழில் துவங்குபவர்கள் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகப் பலன் உண்டு.