இன்றைய ராசி பலன் – 7-10-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்க்கும் துணிவு உங்களுக்கு ஏற்படக்கூடும். மனதில் பட்டதை நியாயம் என்று அதன் வழியில் நடப்பீர்கள். நீங்கள் என்றோ செய்த உதவிகள் என்று உங்களுக்கு பிரதிபலனாக வந்து நிற்கும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் சம்பாதிப்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத ரூபத்தில் நண்பர்கள் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் காரணமாக தேவையில்லாமல் சில செலவுகளை செய்ய நேரலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணத்தில் அனுகூலம் உண்டு.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு விஷயத்தில் சாதக பலன் உண்டு.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அன்றைய நாள் கவனமுடன் இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தேவையில்லாத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணத்தில் அனுகூலமான பலன்கள் உண்டு என்றாலும் இதனால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைபாடுகள் ஏற்படலாம். குடும்பத்திலுள்ளவர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றமான நாளாகவே இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் அதிக தொகையை ஈடுபடுத்தி லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சமுதாயம் பற்றிய சிந்தனை மேலோங்கி காணப்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும். உங்களுக்கு பிரச்சனையாக இருந்தவர்களின் தொல்லைகள் நீங்கும். தொழில் ரீதியான போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு இறைவழிபாடுகள் மன அமைதியைத் தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமாக இருக்கும். உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற கூடிய வாய்ப்புகள் அமையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நல்ல பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் படிப்படியாக முன்னேற்றம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பணியாளர்களை சேர்த்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் தரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சிந்தித்து செயல்படக்கூடிய நாளாக அமையும். எதிலும் அவசரமாக முடிவெடுப்பதை தள்ளிப்போடுவது நல்லது. குறிப்பாக பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தையும் தூரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். உங்களின் புதிய முயற்சிகள் வரவேற்கப்படும். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். எங்களுக்கு புதிய பொருள் சேர்க்கை மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

தனுசு

தனுசு ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். எதிலும் நிதானமும் பொறுமையும் உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்த முடியும். உங்களின் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் அனுகூலமான பலன் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களின் மூலம் சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கூட்டுத்தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் காண்பீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் பொறுப்புகளை உணர்ந்து விட்டுக்கொடுத்து செல்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். குடும்பத்தில் இருக்கும் மூத்த மகனை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுபமாக முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு மறையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. உற்றார், உறவினர்களின் ஆதரவு மனமகிழ்ச்சியை தரும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் நல்ல பலன் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத பகைகளை தவிர்த்து கொள்வது நல்லது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான பயணங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சகோதர சகோதரிகள் வழியே அனுகூலம் பலன்கள் உண்டு. குடும்பத்தில் நிம்மதியும், மன மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சக தொழிலாளர்கள் மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.