இன்றைய ராசி பலன் – 6-10-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்கள் மேலோங்கி காணப்படும். வெளியூர் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனக் குறைவு ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டு என்பதால் தாராளமாக மேற்கொள்ளலாம். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். மனைவிக்கு உரிய மரியாதை கொடுத்தால் மன அமைதி பிறக்கும்.

மிதுனம்

மிதுன ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீண்டநாள் எதிர்பார்த்திருந்த காரியங்கள் கைகூடி வரும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் விரயங்களை சந்திக்க நேரலாம். தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை சீர் செய்ய முடியும். வங்கி சேமிப்பு குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஆன பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்களை சந்திக்க கூடிய நாளாக இருக்கும். வரும் விரயங்களை சுப விரயமாக மாற்றிக் கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் வீட்டுத் தேவைகளை திறம்பட சமாளித்து விடுவீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்க்காத லாபம் கிடைக்க கூடிய யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்வதனால் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் புதிய தொழில் நுணுக்கங்களை சக பணியாளர்கள் உதவியால் கற்றுக் கொள்வீர்கள். நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் சிலருக்கு விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் இருப்பவர்களே உபத்திரவம் செய்யக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். தேவை இல்லாத நபர்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானமும் பொறுமையும் அவசியம். இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். பணவிஷயத்தில் உடன் இருப்பவர்கள் நம்பிக்கையானவர்கள் என்பதை உறுதி செய்வது நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத பண வரவு உண்டாகும். இல்லாதவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மன அமைதி பெறலாம். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பு என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு கொடுப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுயமாக தொழில் செய்வதை பற்றி சிந்தனை இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாள் எதிர்பார்த்த உங்களது முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும் சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் மீது இருந்த அதிருப்தி மாறக்கூடிய சாத்திய கூறுகள் உண்டு. உங்களின் திறமையை வெளிப்படுத்த கூடிய அற்புதமான நாளாக அமையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானமும், பொறுமையும் தேவை. வீட்டில் சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். இதுவரை உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றமான அமைப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. தன வரவு திருப்தியாக இருப்பதால் பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்வுகள் நடைபெறும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் வேண்டுவோர்களுக்கு நல்ல செய்தி வரும்.