இன்றைய ராசி பலன் – 5-10-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறுவதில் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை காணப்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புத்துணர்வு அளிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல்நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய நாளாக அமைகிறது. தலைபாரம், நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க பெறுவார்கள். பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உள்ளது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாக இருக்கும். தேவை இல்லாத நபர்களால் தேவை இல்லாத மன சங்கடங்கள் உருவாகக்கூடும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத விதமாக சில விஷயங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு லாபம் கிடைக்கக்கூடும். தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. சுபகாரியங்கள் கைகூடி வரும். நீ நீ நீண்ட நாள் நிலுவையில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும்.துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்வது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த விஷயங்கள் கைகூடி வரக்கூடிய அற்புதமான நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமான பலன்களை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக டென்ஷன் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும் வகையில் அமையும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக அமைய இருக்கிறது. சிவ வழிபாடு மேற்கொள்ளுங்கள் நன்மை பிறக்கும்.

கன்னி

கன்னி ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமைய கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில விஷயங்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். நேர்மையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் உங்களுக்கு எதிர்பாரா சங்கடங்கள் வந்து சேரலாம். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பமான நாளாக அமையும். எந்த விஷயத்தில் எந்த முடிவை எடுப்பது என்கிற குழப்பங்கள் நீடிக்கும். இப்போதைக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்தால் நல்லது நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் எடுக்கும் முயற்சிகளில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு நாடுவார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். முருக வழிபாடு செய்வது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய பொருளாக இன்றைய நாள் அமையும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும். பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பாராத நபர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். எவரையும் புரிந்து கொள்ளும் மனப்பான்மை கொண்ட உங்களுக்கு சில சோதனைகள் வந்து மறையலாம். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். எதிர்பாராத தனவரவு மன மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கலாம். யார் மனமும் புண்படக் கூடாது என்று நினைக்கும் நீங்கள் மற்றவர்களால் அதிகம் காயப்பட நேரிடும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க போராட வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு இருக்கும். உங்களின் பலவீனத்தை புரிந்து கொள்ளும் நாளாக அமையும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் அமையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.