இன்றைய ராசி பலன் – 12-05-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத இடங்களுக்கு பயணம் செல்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களை கண்டும் காணாமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு பொறுப்புணர்வு அதிகரிக்கும். நவகிரக வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மனஸ்தாபம் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தகுந்த சமயத்தில் நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எளிதாக எதிர் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் இழந்த பொருட்களை திரும்பப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் பாராட்டுகளைப் பெறும் அளவிற்கு நடந்து கொள்வீர்கள். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க கூடிய நாளாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் செலுத்தாமல் லட்சியத்தை நோக்கி பயணம் செய்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு குறைய கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் வாகன ரீதியான பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் குடும்பத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கொடுப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கைநழுவிப் போன சில விஷயங்கள் கைகூடி வரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல் மற்றும் டென்சன் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை அதிகரித்து காணப்படும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும். சாதகமான அமைப்பு என்பதால் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நினைத்த விஷயங்கள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க போராடுவீர்கள் எனினும் திறம்பட சமாளித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நவீன உபகரணங்களை வாங்கும் யோகம் உண்டு. பெண்களுக்கு நினைத்தது நடக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். இதுவரை உங்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் சரியாக புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். சுய தொழிலில் லாபம் காண்பீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பதும் மூலம் மன அமைதி காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். வேலையில் கவனம் தேவை. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்தப்படி எல்லாம் நடக்கும். உங்களுடைய கை ஓங்கி இருப்பதற்கான நேரம் இது. புதிய விஷயங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சீராக இருக்கும். யோகத்தில் எடுப்பவர்களுக்கு கவனம் சிதற வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய நேர்மைக்கு உரிய பலன்களை காண்பீர்கள். பெண்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும்.

x