இன்றைய ராசி பலன் – 11-05-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத நல்ல மாற்றங்கள் நிகழும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவழிக்கக் கூடிய நிமிடங்களாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்த நேரத்தில் நினைத்த பணத்தை பெறுவீர்கள். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமுதாயத்தின் மீது உங்களுக்கு இருந்து வந்த அக்கறை மேலும் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய மதிப்பு மேலும் உயரும். மந்த நிலை காணப்பட்டாலும் சிக்கல்கள் தீரும் வாய்ப்புகள் உண்டு. உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வாகன பயணங்களில் எச்சரிக்கை தேவை.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்படும் இனிய நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாளாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய முழு ஒத்துழைப்பை கொடுத்து முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்ப நிலை நீடிக்கும். எதிர்பார்த்த பணவரவு தடைபடும் என்பதால் டென்ஷனுடன் காணப்படுவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு வேலையிலும் கவனம் இல்லாமல் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சினைகள் நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சகிப்பு தன்மை அதிகம் தேவை. பெண்களுக்கு மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். ஒரே நிலையில் இருக்க தியானம் மேற்கொள்வது நல்லது.

 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் உடைய ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து சீரான சமூக மனநிலையில் இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பாராத இடங்களிலிருந்து சுப செய்திகளை பெறுவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் மனக் கசப்புகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நாளாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் இருக்காது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.

x