இன்றைய ராசி பலன் – 4-05-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும். சுப காரியங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் மந்த நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இனம் புரியாத குழப்பம் நீடிக்கும். பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த சில விஷயங்களுக்கு இடையூறாக ஏதாவது வரலாம். குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வதன் மூலம் லாபம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். பெண்களுக்கு தைரியம் பிறக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத சில விஷயங்கள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் தோல்வியை தழுவும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி அடைய செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். பெண்கள் சாதுரியமாக செயல்பட வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் அடியில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். பெண்களுக்கு கவலைகள் குறையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு வலுவாக வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய திறமையை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். பெண்களுக்கு எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் இணக்கமாக செல்வது உத்தமம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வத்தை செலுத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பங்களை வாங்கும் யோகம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மூன்றாம் நபர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கூடுமான வரை பொறுமையுடன் இருப்பது அவசியமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கவன சிதறல் இல்லாமல் வேலையில் கவனத்துடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்க கூடிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து வீட்டு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். சகோதர சகோதரிகளின் இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும். பெண்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சாற்றலால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து நினைத்த காரியங்களை சாதித்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பெரிதாக பொருட் தேக்கம் ஏற்படாமல் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்புகள் வரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய கவலையில் இருப்பீர்கள். எதிலும் முன்யோசனை இன்றி செயலாற்றுவதை தவிர்ப்பது உத்தமம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் விஷயங்கள் வெற்றியை தரக்கூடியதாக அமையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை இருக்கும். உத்தியோக ரீதியான இட மாற்றம் நல்ல பலன்களைக் கொடுக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்களை காணலாம்.

x