இன்றைய ராசி பலன் – 3-05-2021

மேஷம்:

உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.

ரிஷபம்:

வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிறிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மிதுனம்:

எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண்களால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

கடகம்:

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:

பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.

கன்னி:

புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பதை மட்டும் இந்த வாரம் தவிர்க்கவும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

துலாம்:

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பணலாபமும் கிடைக்கும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

தனுசு:

இன்றைக்கு புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மகரம்:

மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

கும்பம்:

வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் பணம் வரக்கூடும்.

மீனம்:

காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். காரியங்கள் அனுகூலம் உண்டாகும். மாலையில் நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

x