இன்றைய ராசி பலன் – 2-05-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலத்துடன் காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நன்மையில் முடியும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு முடிவெடுப்பது நல்லது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் நினைப்பது ஒன்றாக நடப்பது ஒன்றாகவும் இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையற்ற இழப்புகள் ஏற்படும் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் வலுவாகும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. எதிலும் முன் ஆலோசனையின்றி முடிவெடுப்பது தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கவனம் தேவை.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஒற்றுமை வலுவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது உத்தமம். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். குடும்ப நபர்களை அனுசரித்து செல்வது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பிரச்சனைகள் சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான மாற்றங்களை செயல்படுத்தி பார்ப்பீர்கள். பெண்களுடைய சாதுரியமான நடவடிக்கைகளால் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத எண்ணங்களை தவிர்ப்பது உத்தமம். நடைமுறைக்கு சாத்தியமானவற்றை யோசிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்தி விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்திறன் அதிகரிக்கும்.

துலாம்;

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த சில விஷயங்கள் ஏமாற்றத்தை கொடுக்கும். எனினும் எதிர்பாராத நிறைய விஷயங்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய நினைவுகளை அசை போட்டு பார்க்கக்கூடிய நாளாக இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய அணுகுமுறை மற்றவர்களை கவரும் வண்ணம் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் பாராட்டுகளை பெற்று கொடுக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் நினைத்ததை விட அதிகமான பலன்களை காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன்களும் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்கள் இடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்திக் கொண்டால் மன அமைதி சீர் கெடும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்களுடைய மறைமுக எதிர்ப்புகளை எளிதாக எதிர்கொள்வீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களுடைய அறிவுத் திறமையால் லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சில தொழில் நுட்பங்களையும் கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்துடன் செலவிடக் கூடிய சந்தர்ப்பங்களும் உருவாகும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய லட்சியத்தை நோக்கி செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு வலுவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை உங்களுக்கு எதிரியாக நினைத்த அவர்கள் கூட நட்பு பாராட்டுவர். தொழில் மற்றும் வியாபாரத்தில் இவ்விஷயங்களை துணிச்சலுடன் முடிவெடுத்து செயல்பட்டால் முன்னேற்றம் காணலாம்.

x