இன்றைய ராசி பலன் – 28-04-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய திறமையை வெளிப்படுத்த கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாகன ரீதியான விஷயங்களில் வீண் விரயங்களை சந்திக்க நேரலாம். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சால் எதையும் சாதித்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வரவு செலவு கணக்குகளை கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். பெண்கள் மனதிற்கு பிடித்த அவர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் உண்மை தன்மையை கண்டுபிடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும். பெண்கள் புதுமையான விஷயங்களை செய்வீர்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்களுடைய நட்பு வட்டத்தை அதிகரித்துக் கொள்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அரசு வழி விஷயங்களில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றியிருக்கும் சூழ்ச்சிகளை எளிதாக முறியடித்து விடுவீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மற்றவர்களை ஆலோசனையை கேட்டு முடிவெடுப்பது விட உங்களுடைய சுய புத்தியில் முடிவெடுப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி சூடு பிடிக்க துவங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களிடம் பாராட்டுகளைப் பெறும் படி நடந்து கொள்வீர்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து மோதல்கள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் லாபத்தை பெற்று விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதில் சூழ்ச்சிகள் ஏற்படும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவை இல்லாதவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள். எதையும் பொறுமையுடன் கையாளுவது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் போட்டியாளர்களை வென்று காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். பிள்ளைகளுடைய எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் பாதிப்புகள் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சங்கடங்கள் ஏற்படலாம். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் தாமத பலனை கொடுக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எளிதில் எதையும் செய்து காட்டுவீர்கள். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய சாமர்த்தியமான நடவடிக்கைகள் வெற்றிப்பாதையை காட்டும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பெற்றோர்களின் ஆதரவை பெறுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரித்து காணப்படும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய ரசனைக்கு ஏற்ப பலன்களும் உண்டு. எதையும் நின்று நிதானமாக செயல்படுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை போராட்டம் நீடிக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த சில விஷயங்கள் முடிவுக்கு வரும் யோகமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நல்ல பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மனம் அமைதி பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். பெண்களுக்கு அதிக பொறுமை தேவைப்படும் நாளாக இருக்கும்.

x