இன்றைய ராசி பலன் – 27-08-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் மிகுந்த நாளாக அமையும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பழைய கொடுக்கல் வாங்கல் முடிவுக்கு வரும். தலைவலி, கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. ஆஞ்சநேயரை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலனைத் தரக்கூடிய நாளாக அமையும். எடுத்த காரியம் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை. நரசிம்மரை வழிபட்டு வர தொழிலில் முன்னேற்றம் காண்பீர்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சி நிறைந்த நாளாக அமையும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். தொழில் புரிவோருக்கு பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தினரிடையே அனுசரித்துப் போவது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குருபகவானை வழிபட்டு வர செல்வ அனுகூலம் காண்பீர்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும் திடீர் பண வரவு கிடைக்கும் நாளாக அமையும். மனைவி மற்றும் பிள்ளைகள் உடல்நலத்தில் அக்கறை தேவை. சுப நிகழ்ச்சிகள் கைகூடும் நல்ல நாளாக அமையும். நீண்ட நாள் கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். அம்மன் வழிபாடு இத் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாட்களாக இருந்த பணவரவு முடிவுக்கு வரக்கூடிய நாளாக அமையும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை தேவை. சுயதொழில் புரிவோருக்கு பொருளாதாரத்தில் இறக்கங்கள் ஏற்படும். சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். துர்க்கை அம்மனை வழிபட்டு வர சுபம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்தமாக காணப்படும். எந்த செயலிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடன் இருப்பவரோடு வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்புகள் நேரிடும். கால பைரவர் வழிபாடு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பம் மிகுந்த நாளாக அமையும். குடும்பத்தினருடன் ஆலோசிப்பது நல்லது. வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வேண்டும். அரசாங்க பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். முருகப் பெருமானை வழிபட்டு வர மன அமைதி கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் இறக்கம் நிறைந்த நாளாக அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் வழியில் செலவுகள் உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும். புது முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. சிவன் வழிபாடு நல்ல பலனை கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதி நிறைந்த நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் காண்பீர்கள். பண பரிமாற்றங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். ராகு கேது வழிபாடு குடும்பத்தில் அமைதியை கொடுக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய தொழில் தொடங்க நல்ல நாளாக அமையும். புது புது முயற்சிகளால் லாபம் காண்பீர்கள். உடன் பிறந்தவர்கள் வழியே ஆதாயம் கிடைக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. புதிய பொருட்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு செய்தால் தனவரவு கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நாள் மன சஞ்சலங்கள் நிறைந்த நாளாக அமையும். கடன்கள் பெறுவதற்கு வாய்ப்பு வந்தது. பிறரிடம் அனுசரித்துப் போவது வீண் பிரச்சினைகளை தவிர்க்கவும். புது நட்புக்கள் உருவாகும். விநாயகர் வழிபாடு மன அமைதி கொடுக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலனைத் தரக்கூடிய நாளாக அமையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குரு பகவான் வழிபாடு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

x