இன்றைய ராசி பலன் – 25-04-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் தலை செலவிடக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பொருளாதார ஏற்ற இறக்கங்களை சீர்செய்ய ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஈசனை வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய மனநிம்மதி சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் குறைவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அம்பிகையை துதியுங்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை அதிகரிக்கும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமான வரை வெளியிடங்களில் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானத்தில் இடையூறுகள் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற மன சங்கடங்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் உற்சாகம் காணப்படும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வதை தவிர்த்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்துவிட்டு முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிரியாக இருப்பார்கள். பெண்களுக்கு தன்னம்பிக்கை மேலோங்கி காணப்படும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் பொறுப்புகள் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மன ரீதியான பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சரியாக செய்து முடிக்க போராடுவீர்கள். மற்றவர்களுடைய நலனில் அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்களுடன் வாக்குவாதங்களை தவிர்த்து கூடுமானவரை பொறுமை காப்பது நல்லது. சமூகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் தரும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். முகத்தில் புதுப்பொலிவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி வரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுமானவரை ஒன்றுக்கு இரண்டு முறை ஆலோசனை செய்து விட்டு முதலீடு செய்வது நல்லது. உடனிருக்கும் நண்பர்களின் உதவியால் உத்வேகத்துடன் செயலாற்றக் கூடிய வாய்ப்புகள் உண்டு. முருகப் பெருமானை வழிபட நல்லது நடக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களின் பொழுது கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை அவற்றை தவிர்ப்பது உத்தமம். பிறருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனம் தேவை. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப்பலன் உண்டாகும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் மேலும் வலுவாகும் என்பதால் கூடுமானவரை வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சோர்வுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றத்தை காணலாம். பெண்களுக்கு தைரியம் பிறக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் மனதில் நினைக்கும் காரியம் ஒன்று இனிதே நிறைவேறும். நண்பர்களுடைய ஒத்துழைப்பு வலிமை சேர்க்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய உத்தியோக ரீதியான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலையில் இருந்து வந்தது இனி சூடுபிடிக்க துவங்கும்.

x