இன்றைய ராசி பலன் – 2-10-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். யோகம் தரக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதில் சாதகப்பலன் உண்டாகும். போத் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் ஒத்துழைப்பு தருவார்கள். திடீர் பயணங்கள் மூலம் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பு அளிக்கும். குடும்பத்தில் உற்சாகம் பெருகும். சகோதர சகோதரிகளின் வழியே அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிலருக்கு வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்பு விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. பைரவர் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்பைரவர் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

மிதுனம்

மிதுன ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தீட்டி வைத்த திட்டங்கள் யாவும் சாதகமான பலன்களை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலமான பலன் உண்டு என்றாலும் அவர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையேயான உறவு சுமுகமாக இருக்கும்.

கடகம்

கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. அடுத்தவர்கள் பிரச்சனையில் மூக்கை நுழைக்காமல் வேலையை மட்டும் பார்ப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகளை தீர்க்க போராட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். ஒரு சிலருக்கு வீடு மனை வாங்கும் முயற்சிகளில் வெற்றி தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படவேண்டிய நாளாக அமைய இருக்கிறது. திருமண சுபகாரிய முயற்சிகள் தள்ளி வைப்பது நல்லது. வாகன ரீதியான விஷயங்களில் தேவையில்லாத செலவுகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் ஏற்படலாம். எனினும் அதனால் ஆதாயம் பெற முடியாது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய இருக்கிறது. உங்களைப் பிரிந்து சென்ற சிலர் விரும்பி வந்து இணையும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. பெண்களுக்கு நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தக்க சமயத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியான நேரத்தில் முடிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த வகையில் கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மூலம் தேவையில்லாத வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை விட அதிகம் வரும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமாக காணப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். புதிய தொழில் துவங்கப் அவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு. பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் எதிர்பாராத பணவரவு திருப்தி படுத்தும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வீண் விரயங்கள் உண்டாகலாம். வழக்குகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும் வாய்ப்புகள் உண்டு.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லது நடக்கும். குடும்பத்தில் உங்களின் பொறுப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. திடீர் பயணங்கள் மூலம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய எண்ணம் ஈடேற தாமதமாகலாம். சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். நிலுவையில் இருந்து வந்த பழைய பாக்கிகள் வசூலாகும். சண்டிகேஸ்வரரை வணங்குங்கள் நல்லது நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேசும் பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி காணலாம். நீண்ட நாளாக எதிர்பார்த்து வந்த சில காரியங்கள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். புதிய யுத்திகளை கையாள்வதன் மூலம் லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அசதி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வேலை பளு அதிகரிப்பதால் டென்சனுடன் காணப்படுவார்கள்.