இன்றைய ராசி பலன் – 09-04-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சாற்றலால் எல்லா பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் நினைக்கும் விஷயங்கள் ஈடேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளை பொறுப்பாக செய்து கொடுப்பீர்கள். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பாதை பிறக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாட்களாக தள்ளிப் சென்று கொண்டே இருந்த சில காரியங்கள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் நபர்களுக்கு தேவையற்ற தொல்லைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாழ்க்கையில் இருந்த தடைகள் விலகி வெற்றி அடைவதற்கான வழி பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு யாரையும் பகைத்துக் கொள்ளாமல் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றி அடைவது இடையூறுகள் ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் தைரியத்துடன் முன்னின்று செயல்படுத்தி காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் சிலருக்கு புதிய தொழில் துவங்குவதற்கான அடித்தளம் பிறக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் மதிப்பு உயரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதர்களின் நட்பு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலும் அதிகரித்து காணப்படும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளித்து வெற்றி அடைவீர்கள். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அமைதி இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல் மற்றும் டென்சன் காணப்படும். வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுமான வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுய தொழிலில் லாபம் உண்டு.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் ஆன பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடன் இருப்பவர்களில் சிலர் தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்துவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதையும் எதிர்கொள்ளும் மன தைரியம் வளர்த்துக் கொள்வீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கடன் தொகை குறைவதற்கான வழி பிறக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் ஏற்றம் காணலாம். சுய தொழிலில் லாபம் பெற பேச்சில் இனிமை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டில் மற்றும் அலுவலகங்களில் வேலை பளு அதிகரித்து காணப்படும். தேவையான நேரத்தில் தேவையான ஓய்வை எடுத்துக் கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பெண்களுக்கு சாதுர்யமான பேச்சு மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் கால தாமதத்திற்குப் பின் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சகிப்புத் தன்மை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

x