இன்றைய ராசி பலன் – 1-10-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். தொழில்துறை மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றி தரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்களில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவி இடையே சிறு சிறு மன கசப்புகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பெண்களுக்கு இனிய நாளாக அமைய சந்தர்ப்பங்கள் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வாக்குவாதங்களை தவிர்த்து தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை கையாள்வதன் மூலம் லாபம் பெற முடியும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் டென்சன் போன்றவை ஏற்படலாம். மன அமைதி பெற யோகா தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்து இருக்க உங்களின் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. புதிய வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் உண்டு. சகோதர சகோதரிகளின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். கணவன் மனைவியிடையே இருந்த ஒற்றுமை குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தடைகள் இன்றி வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியாமல் வேலை பளு அதிகரிப்பதால் மன அழுத்தம் ஏற்படலாம். பெற்றோர்களின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குழந்தைகளின் எதிர்கால திட்டமிடல் மேலோங்கி காணப்படும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் யோசித்து முடிவெடுப்பது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த காரியங்கள் அப்படியே நடக்கும் என்பதால் மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் மன அமைதி பெறலாம். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண முடியும். தடைபட்ட சுபகாரியங்கள் முடிவுக்கு வரும். ஒரு சிலருக்கு வாகன ரீதியான பிரச்சினைகள் வீண் விரயங்களை கொடுக்கலாம். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் எதிர் பாராத நபர்களின் மூலம் மாற்றங்கள் நிகழும். நண்பர்களின் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக உடல் உபாதைகள் ஏற்படலாம். பெண்கள் தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது.

தனுசு

தனுசு ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையேயான உறவு பலப்பட ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் குழு உறவினர்கள் வருகையால் குதூகலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் புதிய முதலீடுகளை செய்வதன் மூலம் லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கப் பெறும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல் ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதி காப்பது நல்லது. உற்றார் மற்றும் உறவினர்களின் மூலம் தேவையில்லாத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சுபகாரிய முயற்சிகளில் தடை இன்றி வெற்றி தரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனம் மகிழும் விஷயங்கள் வந்து சேரும். பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. எனினும் உங்களுடைய மனோதைரியம் அதிகரிக்கும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். எதிர்பாராத விரயங்கள் மூலம் கடன் வாங்க நேரலாம். விளம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வர வாய்ப்புகள் உண்டு. இளைஞர்களுக்கு தங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்க கூடிய வகையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் மற்றும் செலவுகள் ஏற்படலாம். கூடுமானவரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.