இன்றைய ராசி பலன் – 16-3-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கால தாமதம் ஏற்படும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் டென்ஷன் இருக்கும். ஆரோக்கிய ரீதியான தொல்லைகள் நீங்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்னர் பல முறை ஆலோசித்துவிட்டு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாள் பகைகளை சரி செய்வதற்கு உரிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் உண்டாகும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் எதிர்பார்த்தவற்றிற்கு எதிர்மறையாக நடக்கும் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தேவையற்ற வாக்குவாதங்கள் ஈடுபட்டால் பிரச்சினைகள் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் ஜெயம் உண்டாகும் அமைப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் கொடுக்கப்படும். குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். நீங்கள் ஒன்றை நினைக்க அது ஒன்று நடக்கும். எனினும் நடப்பவை நல்லவையாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான ஒரு முன்னேற்றத்தை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானத்துடன் செயலாற்றுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு செயலையும் தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். சமூகத்தின் மீதான அக்கறை மேலோங்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்குவதற்கு வாய்ப்புகள் உருவாகும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் தோல்வி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. விநாயகப்பெருமானை வணங்கிவிட்டு எந்த ஒரு செயலையும் செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பு என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண்விரையம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன அமைதி இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க திட்டம் போட்டு செயலாற்றுவது நல்லது. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க கற்றுக் கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் வகையில் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் உற்சாகத்துடன் செயலாற்றக் கூடிய அமைப்பாக இருக்கிறது. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை எளிதாக எதிர்கொள்வீர்கள். வீண் விரயங்களை தவிர்ப்பதன் மூலம் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சரி செய்யலாம்.

x