இன்றைய ராசி பலன் – 30-09-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். திடீர் பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் சக நண்பர்கள் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதனைகளைப் புரிவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த அன்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த இலக்கை நோக்கி பயணிக்கும் நாளாக அமைய இருக்கிறது. எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி வெற்றி தரும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் எச்சரிக்கை தேவை. வெளியூர் வெளிநாடுகளில் இருந்து நன்மை தரும் செய்திகள் வந்து சேரும். வியாபாரம் மற்றும் தொழில் ரீதியான மாற்றங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையேயான அன்னோன்யம் அதிகரிக்கலாம். உங்களைப் புரிந்துகொள்ளாமல் பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து இணையலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் முன் சற்று யோசிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்கள் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நேர்மையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் உங்களுக்கு சில சோதனைகள் வந்து போகலாம்.

கடகம்
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரத்தில் சரிவுடன் காணப்படும் என்பதால் கூடுமான வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் பணிபுரியும் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளிடம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுமானவரை கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். எனினும் தளராத மனம் இருந்தால் வெற்றி நிச்சயம். தயாள குணம் கொண்ட உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சமூக ரீதியான விஷயங்களில் அதிக ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் நிச்சயம் வெற்றி உண்டாகும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். இது வரை நிலுவையில் இருந்து வந்த கடன் பாக்கிகள் வசூலாகும். உங்கள் சரளமாக நடைபெறும். பணிபுரிபவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் குடும்பத்தின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. அரசு வழி காரியங்கள் தாமதப்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்கள் தரும். நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. பெண்கள் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டேன் அனுசரணையாக பேசுவதால் பாதி பிரச்சனை குறையும். குடும்பத்தில் எதிர்பாராத பணவரவு மன மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு

தனுசு ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நீங்க கூடிய அற்புதமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முயற்சி செய்வீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. குடும்பத்தில் குதூகலம் காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தாய்வழி உறவினர்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உடல் உஷ்ண பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நலம் தரும். தொழில் ரீதியான பண வரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சாதகமான அமைப்பு என்பதால் நல்ல பலன்கள் உண்டாகும். பொருளாதாரம் சீராக இருக்கும். தேவையற்ற கடன்களை வாங்குவதை தவிர்க்கவும். இதுவரை இருந்து வந்த தடைகள் யாவும் விலகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலையும், பிள்ளை பாக்கியம் வேண்டுவோருக்கு வரமும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளினால் சிறுசிறு தொந்தரவுகள் வர வாய்ப்புகள் உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். உங்களைப் போட்டியாக நினைக்கும் பலரும் வியக்கும் வண்ணம் நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பெண்களுக்கு வேலை பளு அதிகம் எடுப்பதால் உடல் உபாதைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். வாகன வீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. நரசிம்மரை வழிபட்டால் நல்லது நடக்கும்.