இன்றைய ராசி பலன் – 2-3-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த விஷயங்கள் காலதாமதமான பலன்களைக் கொடுக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பெரிதாக பிரச்சினைகள் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு விடை தெரியாத சில கேள்விகளுக்கு விடை கிடைக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றத்தை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பலவீனம் எது? என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் முன்னேற்றம் உண்டாகும் வகையில் அமையும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிரிகளாக செயல்படுவார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த சில விஷயங்கள் எதிர்மாறாக நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத வாக்குவாதங்களில் தவிர்ப்பதன் மூலம் மன அமைதியை காண்பீர்கள். சோகத்தில் இருப்பவர்கள் யார் என்ன சொன்னாலும் அதனை காதில் போட்டுக் கொள்ளாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய நபர்களின் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் வெற்றியைக் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினருடைய ஆதரவு கிடைப்பதால் மன மகிழ்ச்சியுடன் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மந்தமான நம் உடல் நிலை இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி உண்டாக கூடிய வகையில் அமைப்பு இருப்பதால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். சிலருக்கு புதிய பொருள் சேர்க்கை ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் உள்ளவர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் பிரச்சினையில்லை. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கக்கூடும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. நீங்கள் எடுக்கும் அவசர முடிவுகளால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரலாம் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையேயான ஒற்றுமை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்க கூடும். எனினும் சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையில்லாத பயங்கள் மற்றும் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனை நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும்.

x