இன்றைய ராசி பலன் – 26-2-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படலாம் எனினும் பொருட் தேக்கம் ஏற்படாது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் தான் தொட்டதெல்லாம் துலங்கும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்து வந்த கவலைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் பல முறை யோசித்து செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பழி பாவங்கள் வந்து சேர வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் மூன்றாம் நபர்களை நம்பி எந்த ஒரு பொருளையும் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நடக்கும் விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு கீழ் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் முன்னேற்றம் உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொந்த தொழில் செய்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். இதுவரை வசூலாகாத பாக்கிகள் வசூலாகும் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனக் குழப்பம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுப்புணர்வு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதையும் சாதிக்கக் கூடிய தன்னம்பிக்கையும் தைரியமும் வளரும். கல்வி மற்றும் கேள்வி ஞானத்தில் சிறந்தவர்களாகவும் அங்கு கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் நிச்சயம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு ஏற்படுவதில் சிறப்பாக அமையும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளித்து விடுவீர்கள். வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ சகோதர சகோதரிகளின் ஒற்றுமை அவசியம் ஆகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு செல்வது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒன்று நடக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் நண்பர்களை காணக் கூடிய வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் மற்றும் நிதானம் தேவை. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் பொறுமையுடன் சிந்தித்து செயலாற்றினால் முன்னேற்றம் உண்டாகும். மனைவிக்கு இடையே தேவையற்ற சண்டை சச்சரவு ஏற்படுவதை தவிர்ப்பது உத்தமம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் படிப்படியாக முன்னேற்றம் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறி சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப்பெறும் வாய்ப்புகள் உண்டு. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் என்பதால் கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு உண்டாவதில் இருந்து வந்த சிக்கல் தீரும். எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க போராட்டம் முடிவுக்கு வரும். பெண்களுக்கு இறைவழிபாடுகள் மேல் அதிக ஆர்வம் ஏற்படும்.

x