இன்றைய ராசி பலன் – 25-2-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செய்கின்ற செயல்கள் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது. கிரக அமைப்புகள் சாதகமாக இருப்பதால் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதமான பலன்களை கொடுக்கும். எதிலும் குழப்பமான மனநிலையில் இருந்து முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல் ஆற்றுவது நன்மை தரும். புதிய தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். விஷயங்களில் கொடுக்கல் வாங்கல் எச்சரிக்கை தேவை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பாதையை நோக்கி பயணிக்கும். நீண்ட நாள் கனவுகள், போராட்டங்கள் முடிவுக்கு வரும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் சிறப்பாக அமையும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் கவன சிதறல் காரணமாக தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்கலாம். சோர்வு மற்றும் அயற்சி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உணவு கட்டுப்பாடு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம். சுய தொழிலில் மந்த நிலை காணப்பட்டாலும் முன்னேற்றத்தில் தடை இருக்காது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண ரீதியான விஷயங்களில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும். உத்தியகஸ்தர்களுக்கு நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிக்கு வரவேற்பு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் சீராக அமையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களிடம் ஆலோசனை செய்து விட்டு செய்வது நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சியில் குழப்பமான மனநிலை நீடிக்கும். உறவினர்கள் உடைய ஆதரவு பக்கபலமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நாள் கனவுகள் நடைபெறுவதற்கான யோகம் உண்டு. புதிய பொருள் சேர்க்கை ஒரு சிலருக்கு ஏற்படக்கூடும். பிள்ளை இல்லாதவர்களுக்கு கூடிய விரைவில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு மிகுந்த பொறுமை தேவைப்படுகிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்தநிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. நெருக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இடத்தில் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி பெறலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றியில் செல்லும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு காலம் போன்றது என்பதை உணரக் கூடிய வாய்ப்புகள் அமையும். சுய தொழில் புரிபவர்களுக்கு நல்ல லாபம் உண்டு.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையுடன் செயலாற்றுவது நல்லது. முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களுடன் இருப்பவர்களே உங்களை பற்றிய தவறான வதந்திகளை பரப்புவதற்கான வாய்ப்புகள் உண்டு. எவரையும் எளிதில் எடைபோட்டு விடும் நீங்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க சாதுரியமாக செயல்படுவது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்டநாள் பழைய பாக்கிகள் வசூலாகி கூடிய வாய்ப்புகள் உண்டு. இருந்துவந்த குழப்ப நிலை மாறி தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சக பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களைச் சுற்றியிருக்கும் சந்தர்ப்பவாதிகளை அடையாளம் காண கூடிய வாய்ப்புகள் உண்டு. யாருடைய மனதையும் புண்படுத்த நினைக்காத நீங்கள் மனம் அமைதி பெற மற்றவர்கள் செய்த தவறை மன்னிப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

x