இன்றைய ராசி பலன் – 15-2-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தடைப்பட்ட சில விஷயங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகம் ஏற்படக் கூடிய நிகழ்வுகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று கவனத்துடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டிகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களை எதிர்ப்பவர்கள் உடைய வலிமையை தகர்த்து எரிவீர்கள். வீட்டில் அமைதி நிலவ பொறுமையை கையாள்வது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை அடையலாம். தேவையில்லாத கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த மந்தமான நிலை மாறும். நீண்ட நாள் கேள்விகளுக்கான பதில் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சியில் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் காலத்தை தேவையில்லாமல் விரையம் ஆக்குவதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொலை தூரப் பயணங்களை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க கூடிய வகையில் நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் தோல்வி ஏற்படுவதை மாற்றி அமைக்கக் கூடிய வலிமை சேர்க்கும் வகையில் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நினைக்கக் கூடிய வகையில் லாபம் அமையும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை நீங்கள் மாற்றிக் கொள்ளவே முடியாத ஒரு விஷயத்தை மாற்றிக்கொள்ள விடாப்பிடியான முயற்சியை மேற் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்வேகம் பிறக்கும். கணவன்-மனைவி ஒருவரையொருவர் புரிந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்க கூடிய மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களுடைய ஆதரவு கிடைத்து மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அடுத்து என்ன செய்வது? என்கிற திட்டமிடல் மேலோங்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் நிதானமாக செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதட்டத்துடன் காணப்படக்கூடிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை பெறலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய வேலையில் மட்டும் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நாணயமாக நடந்து கொள்ள முயற்சி செய்வீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் பல நடைப்பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் வெற்றி கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். உத்யோகத்தில் சுமுகமான மனநிலை இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்களுக்கு மனதில் போட்டு கஷ்டப்படுத்தி கொண்டிருந்த சில விஷயங்கள் முடிவுக்கு வரும். எதிலும் நிதானமும், தெளிவும் இருப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி பெறலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நியாயத்திற்கு கட்டுப்பட்டு செயல்படும் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும்.

x