Traffic Bot

இன்றைய ராசி பலன் – 13-2-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் நீங்கள் நினைக்காதவைகள் எல்லாம் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான நேரம் இது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நன்மைகளை பெறலாம். விநாயகரை வழிபட நல்லது நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய எண்ணமெல்லாம் நேரக்கூடிய அற்புதமான நாள். நீண்டநாள் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கப்படும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் இதுவரை அனுபவித்து கொண்டிருந்த துன்பங்கள் நீங்கி ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்கிற நம்பிக்கை வளரும். வெளியூர் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த போட்டிகள் நீங்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் தேவைப்படக்கூடிய நாளாக அமையும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் காலதாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை நீங்களே உணரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உங்களை சுற்றி இருப்பவர்களை புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் காணப்படக்கூடிய நாளாக இருக்கும். எதிலும் ஒரு உத்வேகம் பிறப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே பிணக்குகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் ரீதியான விஷயங்களில் கவனம் தேவை. பெண்களுக்கு இறைவழிபாடுகள் மூலம் மன நிம்மதி பெறலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்களுடைய ஆதரவும் ஒத்துழைப்பும் முழுமையாக கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நினைத்தபடியே நடக்கக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கும்.. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான பயணத்தில் எச்சரிக்கை தேவை. சுயதொழில் உங்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் பொழுது கூடுதல் எச்சரிக்கை செலுத்துவது நல்லது. உத்யோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாவதில் இடையூறுகள் ஏற்படலாம். சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப்பெறும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட்டால் மன உளைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மூன்றாம் நபர்களை நம்பி எந்த ஒரு ரகசியத்தையும் சொல்லாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் காணலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். மற்றவைகளை சரியாக புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். நல்லது எது? கெட்டது எது? என்று எடை போட பழகிக் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்க கூடிய யோகம் உண்டாகும்.

x