திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர தெப்பம் நிறைவு..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வந்த வருடாந்திர தெப்ப உற்சவம் நிறைவு பெற்றது.

கடந்த 24 ஆம் திகதி (24.03.2021) தொடங்கிய தெப்பல் உற்சவத்தின் கடைசி நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பக் குளத்தை சுற்றி 7 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது தெப்பக் குளத்தை சுற்றி அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்திப் பெருக்குடன் வழிபட்டனர்.