உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடியாக உயர்வு

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த கொரோனா தொற்று இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தொடர்ந்து இந்தியா நீடிக்கிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3,32,97,503 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,46,29,887 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 02 ஆயிரத்து 137 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 76 லட்சத்து 65 ஆயிரத்து 479 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 367 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா       –  பாதிப்பு – 73,20,669, உயிரிழப்பு – 2,09,453, குணமடைந்தோர் – 45,60,038
இந்தியா       –    பாதிப்பு – 60,73,348, உயிரிழப்பு –   95,574, குணமடைந்தோர் – 50,13,367
பிரேசில்       –    பாதிப்பு – 47,32,309, உயிரிழப்பு – 1,41,776, குணமடைந்தோர் –  40,60,088
ரஷியா        –    பாதிப்பு – 11,51,438, உயிரிழப்பு –   20,324, குணமடைந்தோர்  – 9,43,218
கொலம்பியா  –     பாதிப்பு –  8,13,056, உயிரிழப்பு –   25,488, குணமடைந்தோர்  – 7,11,472