இலங்கை உட்பட 11 நாட்டு மக்களுக்கு ஜப்பான் விதித்துள்ள பயண தடை

இலங்கை உட்பட ஆசிய பிராந்தியத்தில் உள்ள 11 நாடுகளின் பிரஜைகளுக்கு இன்று 14 ந் திகதி முதல் ஜப்பானுக்குள் பிரவேசிக்க அந்த நாடு தடை விதித்துள்ளது.

கோவிட் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு நாட்டின் எல்லைக் கொள்கைகள் மாற்றி விரிவாக்கப்பட்டதை அடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இ

அங்கு டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட பல நகரங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது,

அதேபோல் நள்ளிரவு முதல் அந்த நாட்டின் மேலும் பல நகரஙங்களும் முடக்கப்கப்டுள்ளன.

இலங்கை, தைவான், தாய்லாந்து, ஹொங்கொங், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஜப்பானுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தடை ஜனவரி 31 வரை வியாபார பயணிகளுக்கு அமுலாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் கொவிட் -19 நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்திற்கும் அதிகம் என்பதோடு நான்காயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

x