சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்

உள்நாட்டு போரால் பேரழிவை சந்தித்துள்ள சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிழவி வருகிறது.

மேலும், இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஈரான் புரட்சிப்படை பிரிவினர், வெளிநாட்டு போராளிகளும் பலர் பதுங்கியுள்ளனர். இவர்களுக்கு சிரியா படையினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை அழிக்க இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் அவ்வப்போது விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு.

இந்நிலையில், சிரியாவில் உள்ள அல்பு கமல் மாகாணம் மற்றும் டெரி இசோர் நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மொத்தம் 57 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் சிரியா படையினர், ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என சிரியாவில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களில் பெரும்பாலானோர் ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x