பாகிஸ்தான் இந்து சாமியார் சமாதி மீது ஒரு கும்பல் தாக்குதல்

கரக் மாவட்டத்தில் டெரீ என்ற சிற்றூரில் ஸ்ரீ பரம்ஹன்ஸ் ஜி மகராஜ் என்கிற இந்து சாமியாரின் பழமையான சமாதி அமைந்துள்ளது. இந்து தலைவர் ஒருவர் இந்த சமாதியை ஒட்டி வீடு கட்டியதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை என்று போலீஸ் கூறுகிறது.

அப்பகுதியில் இந்துக்கள் யாரும் குடியிருக்கவில்லை என கரக் மாவட்ட காவல்துறை அதிகாரி இர்ஃபானுல்லா மார்வாத் பிபிசி செய்தியாளர் சிராஜுதீனிடம் தெரிவித்தார். சமாதிக்கு அருகில் நடந்து கொண்டிருந்த கட்டட வேலைகள், அச்சமாதியின் ஒரு பகுதி என உள்ளூர் மக்கள் கருதினார்கள்.

இந்தப் போராட்டம் குறித்து போலீசுக்கு தெரியும் என்றும், அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்றும் கூறுகிறார் மார்வாத். இந்தப் போராட்டம் அமைதியாக நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் ஒர் இஸ்லாமிய மதகுரு, மக்களைத் தூண்டிவிட்டு ஒட்டுமொத்த சூழலையும் பாழாக்கிவிட்டார். கூட்டம் அதிக அளவில் இருந்ததால், கலவரத்தைப் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றார் மார்வாத்.

டெரீ

தற்போது அப்பகுதியில் சூழல் கட்டுக்குள் இருக்கிறது இருப்பினும் இன்னும் பதற்றமாகவே இருக்கிறது. இதுவரை இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால் இதற்கு காரணமானவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று கூறியிருக்கிறார் மாவட்ட காவல்துறை அதிகாரி.

x