இந்தோனேஷியாவில் அதிர்ச்சி சம்பவம்

ஜகார்த்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.

அந்த நோயாளியிடம் ஒரு நர்சு அன்பாக பேசினார். சில நாட்களில் அவர் கொரோனா நோயாளியிடம் அதிக நெருக்கம் காட்டினார்.

அந்த நெருக்கம் விபரீதமாக மாறியது. நோயாளியை கட்டாயப்படுத்தி ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அந்த நர்சு கொரோனா நோயாளியிடம் தவறான உறவில் ஈடுபட்டார். அந்த நோயாளி வலைத்தளத்தில் இந்த விவரத்தை வெளியிட்டார். இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் நடத்திய விசாரணையில் கொரோனா நோயாளியிடம் நர்சு தவறான பாலியல் தொடர்பில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அந்த நர்சும் தனிமைப்படுத்தப்பட்டார்.

ஆஸ்பத்திரி நிர்வாகம் அந்த நர்சை பணியல் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து நர்சுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. என்றாலும் தனிமைப்படுத்தப்பட்டார்.

மத்திய ஜகார்த்தா போலீசார் நர்சு மீதும் அவருடன் தொடர்பில் இருந்த கொரோனா நோயாளி மீதும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இருவரையும் கைது செய்து இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

x