அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணம், நெவர்லாந்தில் மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு சொந்தமாக 2 ஆயிரத்து 700 ஏக்கரில் பண்ணை வீடு உள்ளது. குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்த மைக்கேல் ஜாக்சன், இந்த பண்ணை வீட்டை அதற்காக பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில் இந்த பண்ணை வீட்டில், சிறுவனுக்கு பாலியல் துன்பம் அளித்ததாக, ஜாக்சன் மீது புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த பண்ணை வீட்டை மைக்கேல் ஜாக்சன் புறக்கணித்து வந்துள்ளார்.
அவரது மறைவிற்கு பிறகு, பல்வேறு சிக்கல்களில் இருந்து வந்த இந்த பண்ணை வீட்டை, தொழிலதிபர் ரோன் பர்கல் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, 22 மில்லியன் டாலர், அதாவது சுமார் 161 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக, தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.