அமெரிக்காவில் பேரணி சென்றவர்கள் மீது கார் மோதல் – பலர் காயம்

அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் கருப்பின மக்களின் வாழ்வும் முக்கியம் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு வேகமாக வந்த கார் ஒன்று போராட்டக்காரர்கள் மீது மோதியது. இதில் பலர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வாகனம் மோதியதில் 6 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் யாருக்கும் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

வாகனத்தை ஓட்டி வந்த பெண் தற்போது போலீசார் கஸ்டடியில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.