வங்கதேசத்தில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 3,524 பேர் மீட்பு

வங்கதேசத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 3,524 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. வங்க தேசத்திலும் கொரோனா தீவிரமாக வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான செயல்களை அரசு மேற்கொண்டுள்ளது.

வங்கதேசத்தில் ஒரே நாளில் புதிதாக 1,973 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,94,598 ஆக அதிகரித்தது. கொரோனாவிற்கு மேலும் 34 பேர் (கடந்த 24 மணிநேரத்தில்) பலியாகினர்.

வங்கதேசத்தில் நோயினால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,941 ஆக உயர்ந்தது.

வங்க தேசத்தில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 3,524 பேர் மீட்கப்பட்டு வீடு திரும்பினர். நாட்டில் இதுவரை மீட்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,79,091 ஆக உயர்ந்தது.

நாட்டில் உள்ள 91 சோதனை மையங்கள் மூலம் 10,801 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டன.

நாட்டில் கொரோனா பாதிப்புகளில் மீட்பு விகிதம் 60.79 சதவீதமாகவும், இறப்பு விகிதம் ( Case Fertility Rate – CFR ) 1.34 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.