அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா – 1.50 கோடியை கடந்தது பாதிப்பு

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.50 கோடியைக் கடந்துள்ளது.
அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 88 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 88 லட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.