45 அடி உயர பாலத்தில் இருந்து சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து – 17 பேர் பலி

பிரேசிலில் சுற்றுலாப் பயணிகள் 40 பேருடன் ஒரு பஸ் சென்று கொண்டு இருந்தது. மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் ஜோவா மோன்லேவாட் என்னுமிடத்தில் 45 அடி உயரப் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பஸ் இயந்திரக் கோளாறு காரணமாக பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர் .

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த புதன்கிழமை சாவோ பாலோவின் டாகுவாவில் ஒரு பஸ் மற்றும் டிரக் மோதிக்கொண்டதில் 42 பேர் பலியானார்கள். பிரேசிலில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது கொடிய விபத்து இது ஆகும்.