சந்திரனில் நாட்டப்பட்ட சீனாவின் தேசிய கொடி

சீனா தனது தேசிய கொடியை சந்திரனில் நாட்டியுள்ளது.

சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்தினால் வெளியிடப்பட்ட படங்கள், ஐந்து நட்சத்திரங்கள்கொண்ட சிவப்புக் கொடி காற்றற்ற சந்திர மேற்பரப்பில் நிலையாக நிற்பதைக் காட்டுகின்றன.

சீனாவினால் அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வு கருவி சந்திரனின் பாறை மாதிரிகளுடன் சந்திரனைவிட்டு வெளியேறுவதற்கு முன்பு இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் சீனா சந்திரனுக்கான பயணங்களை செய்திருந்தாலும், நிலையான கொடியை நாட்டவில்லை.

1969 ஆம் ஆண்டில் அப்பல்லோ 11 மூலம் சென்ற விண்வெளி ஆய்வாளர்கள் அமெரிக்காவின் கொடியை சந்திரனில் நாட்டினர்.

இதுவே மனிதர்களால் சந்திரனில் நாட்டப்பட்ட முதல் கொடியாகும்.

1972 வரை அடுத்தடுத்த பயணங்களின் போது மேலும் ஐந்து அமெரிக்க கொடிகள் சந்திர மேற்பரப்பில் நடப்பட்டன.

2012 ஆம் ஆண்டில் நாசா செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டு குறித்த ஐந்து கொடிகள் இன்னும் நிலையாக நிற்பதை உறுதிப்படுத்தியது.