லண்டனில் நிர்வாணமாக சைக்கிளில் சுற்றிய இளம்பெண்! எதற்காக தெரியுமா?

லண்டனில் இளம்பெண்ணொருவர் தற்கொலைகளை தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிர்வாணமாக சைக்கிளில் சவாரி செய்யும் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

லண்டனை சேர்ந்தவர் கெர்ரி பார்ன்ஸ். இவரது உறவினர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.

அந்த மரணம் கெர்ரியை அதிகமாகவே உலுக்கிவிட்டது.

பல நாட்களை அதை நினைத்து அழுத அவர் மனித வாழ்க்கையின் துயரம், துன்பங்கள் இதுதானோ? இப்படிப்பட்ட சுருங்கிய வாழ்க்கையில் நம்முடைய பங்களிப்பு ஏதாவது இருக்க வேண்டும், தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று நினைத்தார்.

அதற்காக, தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டி தரலாம் என்று முடிவு செய்தார். அவரது முயற்சிகள் ஆரம்பத்தில் பெருமளவு வெற்றியை தரவில்லை.

அதனால் வேறு எப்படி பணத்தை திரட்டுவது என்று யோசிக்கும்போது, சைக்கிள் சவாரி பற்றி பெர்ரியின் நண்பர் யோசனை கூறினார்.

அதை செயல்படுத்த முடிவு செய்த பெர்ரி களத்தில் குதித்தார்.

அதன்படியே சைக்கிளில் நிர்வாணமாகவே வலம் வந்தார். நிர்வாணமாக லண்டனைச் சுற்றி 10 மைல் சைக்கிள் ஓட்டியுள்ளார்.

தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த சவாரியை முன்னெடுத்தார்.

இதுகுறித்து பெர்ரி கூறுகையில், தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக பணம் திரட்டுவதற்கும் நான் விரும்பினேன்.

என் உறவினர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார். அதனால், நான் செய்வது தவறானதாக தெரியவில்லை.

நான் நிர்வாணமாக சைக்கிள் சவாரி செய்து, அதை சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளேன்.

இதன்மூலம் கிடைத்த நிதி உதவி மூலம் தற்கொலைகள் சிறிது குறைந்தாலும் எனக்கு திருப்தியே என கூறியுள்ளார்.