14 வயது சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக 32 வயது பெண் மீது குற்றச்சாட்டு!

பிரிட்டனைச் சேர்ந்த 32 வயதான பெண்ணொருவர், 14 வயதான சிறுவனொருவனை தனது வீட்டுக்கு வரவழைத்து பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

குளோசெஸ்டஷயர் பிராந்தியத்தைச் சேர்ந்த தியா வின்சென்ட் எனும் பெண் மீதே இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது 3 பிள்ளைகளின் தாயான இவர், 2018 ஒக்டோபர் 21 ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் இரு சிறுவர்கள் கால்பந்தாட்டம் விளையாடுவதை பார்த்த பின்னர், அவர்களை தனது வீட்டுக்கு அழைத்தார் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சிறுவர்களுக்கு தண்ணீர் வழங்கிய தியா வின்சென்ட், மேற்படி சிறுவர்களுடன் தனது உடல் குறித்து பாலியல் குறித்தும் உரையாடினார் எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அச்சிறுவர்களில் இளையவரான 14 வயது சிறுவனை தனது வீட்டில் மேல் மாடிக்கு அழைத்துச் சென்று அச்சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார் எனவும் நீதிமன்றில் அரச சட்டத்தரணி கிறிஸ்டோபர் ஸ்மித் தெரிவித்தார். அவ்வேளையில் மற்றைய சிறுவன் சமையல் அறையில் இருந்தான் எனவும் ஸ்மித் கூறினார்.

குறித்த சிறுவனுடன் 2018 ஒக்டோபர் 21 ஆம் திகதி தான் பாலியல் உறவில் ஈடுபட்டதாக தியா வின்சென்ட் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், அச்சிறுவன் 16 வயதுக்கு மேற்பட்டவன் என தான் நம்பியதாக அவர் கூறினார்.