பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலித்து கர்ப்பிணி மனைவியுடன் நேரலையில் செய்த செயல்

ரஷ்யாவில் பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலித்து நேரலையில் கர்ப்பிணி மனைவியை துன்புறுத்தி கொலை செய்த கொடூர நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கட்டணம் செலுத்திய பார்வையாளர்களின் கோரிக்கை ஏற்று, உறைய வைக்கும் கடும் குளிரில் தனது கர்ப்பிணி மனைவியை அந்த நபர் வெறும் உள்ளாடையுடன் மொட்டைமாடியில் நிறுத்தி நேரலையும் செய்துள்ளார்.

தலைநகர் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள இவானோவ்கா கிராமத்தில் ஒரு வாடகை குடியிருப்பில் இருந்தே, 30 வயதான Stas Reeflay என்பவர் இந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார்.

கட்டணம் வசூலித்து யூடியூப் நேரலையில் நிகழ்ச்சி முன்னெடுப்பவர் இந்த Stas Reeflay.

சம்பவத்தன்று, பார்வையாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலித்து, 28 வயதான தமது கர்ப்பிணி மனைவியை அவர் துன்புறுத்தியுள்ளார். இதில் ஒரு பார்வையாளர் 1000 டொலர் கட்டணமாக செலுத்தி, கொடூரமாக துன்பிறுத்த செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் அந்த இளம் கர்ப்பிணி மரணமடைந்த நிலையில், தற்போது அதுபோன்ற கொடூர நிகழ்ச்சிகளுக்கு ரஷ்யாவில் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குறித்த வன்முறை காணொளிகளை சிறார்களும் காணும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மிகவும் கொடூரமாக நேரலை செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சியில், ஒரு கட்டத்தில் குறித்த கர்ப்பிணி பேச்சு மூச்சில்லாமல் படுத்துள்ளார்.

இருப்பினும் ஒவ்வொரு நொடியும் என்ன நடக்கிறது என்பதை அந்த நபர் தமது பார்வையாளர்களுக்கு தெரிவித்து வந்துள்ளார்.

மட்டுமின்றி, ஆம்புலன்ஸ் சேவைக்கு அவர் தகவல் அளிக்கும் வரையில், ஆயிரக்கணக்கான அவரது பார்வையாளர்கள் மொத்த நிகழ்வையும் நேரலையில் கண்டுள்ளனர்.

மட்டுமின்றி, மருத்துவ உதவிக்குழுவினர் அந்த குடியிருப்புக்குள் வந்து, பரிசோதனை செய்வதும் நேரலை செய்யப்பட்டுள்ளது.

அந்த கர்ப்பிணி மரணமடைந்த பின்னரும் இரண்டு மணி நேரம் நேரலை செய்யப்பட்டுள்ளது.

இந்த கொடூர நிகழ்ச்சியால், அந்த நபர் தமது ரஷ்ய மற்றும் சர்வதேச பார்வையாளர்களிடம் இருந்து பெருந்தொகை கட்டணமாக வசூலித்துள்ளார்.

மிகவும் கொடூரமான நிகழ்ச்சிகளை மட்டுமே நேரலை செய்து வந்துள்ள அந்த நபரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும், அவர் தொடர்பான குற்றச்சாட்டு நிரூபணமானால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது.