மலேசிய காவற்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்த நபர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரண்டாம் நிலை தலைவர் என்று தம்மை அடையாளப்படுத்தி, மலேசிய காவற்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஒருவர் தொடர்பான விசாரணைகளை அந்த நாட்டின் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மலேசியாவின் காவற்துறை தலைமையகம் மீது தாக்குதல் நடத்துவதுடன், அந்த நாட்டின் காவற்துறை மா அதிபர் டான் சிறி அப்துல் ஹமீட் பத்ரு மீதும் தாக்குதல் நடத்தவிருப்பதாக குறித்த நபர் எச்சரித்துள்ளார்.

மேலும் இலங்கையிலும் தாக்குதல் நடத்தவிருப்பதாக அவர் எச்சரித்திருப்பதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் குறித்த விசாரணைகளை மலேசிய காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.