ஆடைகளின்றி சாலையோரம் இறந்துகிடந்த இளம்பெண்

அமெரிக்காவின் டெக்சாசில் புதர்களுக்கு நடுவே கால்கள் இரண்டு நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்ட ஒருவர், அங்கே ஒரு பெண் உடலில் ஆடைகள் எதுவும் இன்றி இறந்துகிடப்பதைக் கண்டுள்ளார்.

உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் யார் என அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் இறங்கினார்கள்.

விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் Alexis Sharkey (26) என்பது தெரியவந்தது. அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை, என்றாலும், அது சாதாரண மரணம் அல்ல என

பொலிசார் தெரிவித்திருந்தார்கள். Alexisஇன் உடல், உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தன் மகள் கொலைதான் செய்யப்பட்டிருப்பாள், அது சாதாரண மரணமல்ல என Alexisஇன் தாயார் Stacey Robinault தெரிவித்துள்ளார்.

அவள் கண்டெடுக்கப்பட்ட நிலைமையைப் பார்க்கும்போது, அப்படியெல்லாம் என் மகள் செய்யமாட்டாள், ஒரு தாயாக என மனது சொல்கிறது, அவள் கொலைதான் செய்யப்பட்டிருப்பாள் என நான் நம்புகிறேன் என்கிறார் அவர்.

ஒரு வருடத்திற்கு முன் Alexisஇற்கு திருமணமான நிலையில், அவள் ஒரு அருமையான பெண் என அவரது கணவர் Tom (49) தெரிவித்துள்ளார்.

ஆனால், Alexisஇன் தோழியான Tanya Ricardo, Alexis விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

Alexisஇன் இன்னொரு தோழி, மரணத்திற்கு முந்தைய நாட்களில் அவர் மிகவும் பயந்திருந்ததாக தெரிவிக்கிறார். அவர் எதைக் குறித்து பயந்தார் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இப்படி தொடர்ந்து புதிது புதிதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ள நிலையில், Alexisஇன் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியானபிறகுதான், ஓரளவாவது என்ன நடந்தது என்பது தெரியவரும்.