கொரோனா தடுப்பூசி அனுமதி பெற்ற முதல் நாடானது இங்கிலாந்து

கொரோனா வைரஸ் தடுப்பூசியினை பயன்படுத்துவதற்கு உலகில் அனுமதி பெற்ற முதல் நாடாக இங்கிலாந்து இடம்பெற்றுள்ளது.

சுயாதீன மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (எம்.எச்.ஆர்.ஏ) பரிந்துரையை இங்கிலாந்து அரசு இன்று ஏற்றுக்கொண்டுள்ளது.

குறித்த தடுப்பூசியானது அடுத்த வாரம் முதல் இங்கிலாந்து முழுவதும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.