குரோஷியா பிரதமருக்கு கொரோனா தொற்று

குரோஷியா நாட்டின் பிரதமர் ஆன்ட்ராஜ் பிளேன்கோவிக். இவரது மனைவிக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பிரதமர் கடந்த சனிக்கிழமையில் இருந்து தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது. இதற்கிடையே 2-வது முறையாக பரிசோதனை செய்தபோது பிரதமர் ஆன்ட்ராஜ் பிளேன்கோவிக்கிற்கு தொற்று இருப்பது உறுதியானதாக மந்திரி சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்த டுவிட்டர் பதிவில், வீட்டின் தனிமைப்படுத்திக்கொண்ட பிரதமர் அங்கிருந்தபடியே தனது அலுவலகப்பணிகளை மேற்கொண்டுள்ளார். டாக்டர்களின் அறிவுரையின்படி செயல்பட்டு வருவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.