மூக்கு துவாரத்தில் 50 ஆண்டுகளாக சிக்கியிருந்த பொருள்: மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நபர்

ரஷ்யாவில் மூக்கு துவாரத்தில் சிக்கிய நாணயத்தை ஒருவர் நீண்ட 50 ஆண்டுகளுக்கு பின்னர் மருத்துவர்கள் உதவியால் நீக்கியுள்ளார்.

ரஷ்ய நாட்டவரான 59 வயது நபர் தமக்கு 6 வயது இருக்கும் போது, உள்ளூர் நாணயம் ஒன்றை தமது வலப்பக்க மூக்கு துவாரத்தில் சொருகியுள்ளார்.

ஆனால் இந்த விவகாரத்தை தமது கண்டிப்பான தாயாரிடம் கூறவும், அந்த நாணயத்தை அப்புறப்படுத்தவும் அவர் அஞ்சியுள்ளார்.

நாட்கள் செல்ல, மூக்கு துவாரத்தினுள் நாணயம் இருப்பதையும் அவர் மறந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தமது வலப்பக்க மூக்கில் இருந்து மொத்தமாக மூச்சுவிட முடியவில்லை என மருத்துவரை நாடியுள்ளார்.

அவருக்கு ஸ்கேன் பரிசோதனை நடத்திய மருத்துவர்கள், அவரது மூக்கு துவாரத்தில் ஒரு பொருள் சிக்கியிருப்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் சிதைந்த நிலையில் இருந்த ரஷ்ய ஒரு கோபெக் நாணயத்தை 53 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுத்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும், அந்த நபர் திங்களன்று குணம் பெற்று வீடு திரும்பியதாகவும், தற்போது அவருக்கு தனது மூக்கு துவாரம் வழியாக சுவாசிக்க முடிகிறது எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.