நிர்வாண புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ந்து போன இளம்பெண்

அயர்லாந்தில் தன்னுடைய நிர்வாண புகைப்படங்கள் உலா வருவதை பார்த்த இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

டுப்லினை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணான எமி என்பவர் ஓன்லைனில் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

அதாவது அந்த புகைப்படங்கள் 17 வயதில் எடுத்தது என கூறுகிறார் எமி. இதோடு எமியின் தோழி புகைப்படமும் அதில் இருந்திருக்கிறது.

எமி கூறுகையில், என்னுடைய முன்னாள் காதலன் இந்த புகைப்படங்களை அவன் நண்பர்களுக்கு அனுப்பிருக்கக்கூடும் என நினைக்கிறேன்.

அதே நேரத்தில் அந்த புகைப்படங்களை யார் வெளியிட்டனர் என தெரியவில்லை.

இப்போது என்னை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் தெரிந்த ஆண்கள் மீது எனக்கு நம்பிக்கையே இல்லை.

இது போன்ற தனிப்பட்ட புகைப்படங்களை வெளியில் பகிர்ந்து கொள்வதிலிருந்து பாதுகாக்க எந்த சட்டமும் இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என கூறியுள்ளார்.

இது போன்ற பிரச்சினைகள் தொடர்பில் சட்டங்கள் இல்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் தரும் நிலையில் நாட்டின் நீதி அமைச்சர் ஹெலன் மெக்கண்டி விரைவில் அமைச்சரவைக்கு ஒரு குறிப்பைக் கொண்டு வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.